2011ம் ஆண்டே தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க முடிவெடுத்தார்கள்! பிசிசிஐ முன்னாள் தலைவர் பரபரப்பு தகவல்

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த 15ந்தேதி சுதந்திரத் தினத்தன்று, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவரது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், கடந்த 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற உடனயே தோனியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க தேர்வு குழுவினர் முடிவெடுத்தார்கள் என்று  சிஎஸ்கே நிர்வாகியும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான என். சீனிவாசன்  பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கடந்த சனிக்கிழமையன்று (ஆகஸ்டு 15, 2020)  அறிவித்தார். தோனியின் திடீர் அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் தோனி விலகலுக்கு பாஜக தலைமைதான் காரணம் என்றும் சமூக வலைதலைளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த  2011ம் ஆண்டே  தோனியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க தேர்வுகுழுவினர் முடிவெடுத்தனர் என்று  முன்னாள் பிசிசிஐ தலைவரும், சிஎஸ்கே நிறுவனருமான என். சீனிவாசன்  தனது பழைய  நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

கடந்த 2001ம் ஆண்டு,  இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் நன்றாக விளையாடவில்லை. இதனால், தேர்வுக்குழுவில் உள்ள ஒருவர்,  தோனியை ஒரு நாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்க முடிவெடுத்தார்.

தோனி ஓய்வு அறிவிப்புக்கு அமித்ஷா மகன் காரணம்?

ஆனால், இதற்கு சக உறுப்பினர்கள் ஒத்துழைக்கவில்லை. தோனியை எப்படி கேப்டன் பதவியிலிருந்து நீக்க முடியும்? சில மாதங்களுக்கு முன்பு தான் உலகக் கோப்பையை வென்றிருந்தார். தோனிக்குப் பதிலாக யாரை கேப்டனாக்குவது என கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது, நான்,  தோனியை அணியில் வீரராக மட்டுமே தேர்வு செய்ய முடியாது என்று கூறினேன்.

பின்னர்,  நான் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது பிசிசிஐ செயலாளராக இருந்த சஞ்சய் ஜக்தேல் என்னிடம் வந்து, தோனியை கேப்டனாகத் தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் மறுக்கிறார்கள். அணியில் மட்டும் தேர்வு செய்வார்களாம் என்று கூறுவதாக தெரிவித்தார்.

ஆனால்,  தோனி தான் கேப்டன் என நான் முடிவெடுத்தேன். என்னுடைய அதிகாரங்களை அதற்காகப் பயன்படுத்தி னேன். இந்த விவகாரம் பற்றி 2012ம் ஆண்டு, தேர்வுக்குழுவில் இருந்த மொஹிந்தர் அமர்நாத் பேசியுள்ளார்.

இவ்வாறு என்.சீனிவாசன் கூறியுள்ளார்.