அமீரகத்தில் ஐபிஎல் கன்ஃபார்ம் – ஏற்பு கடிதம் அனுப்பிய பிசிசிஐ!

துபாய்: ஐபிஎல் தொடரை நடத்தும் கோரிக்கை ஏற்றதாக பிசிசிஐ அமைப்பிடமிருந்து கடிதம் வந்துள்ளதாக எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு நடைபெறவிருந்து உலகக்கோப்பை டி-20 தொடரும் ஒத்திவைக்கப்பட்டது. எனவே, இக்காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை அமீரக நாட்டில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

முன்னதாக, இதற்கான விருப்பத்தை அமீரக நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளிப்படுத்தியிருந்தது. இந்நிலையில், அந்தக் கோரிக்கையை முறைப்படி ஏற்று, பிசிசிஐ சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபியில் இத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோரிக்கை ஏற்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதையடுத்து, 13வது ஐபிஎல் சீசன் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

கார்ட்டூன் கேலரி