மும்பை

சச்சின் டெண்டுல்கர் மீதான ஆதாயம் தரும் இரு பதவிகள் சர்ச்சையில் மும்பை இந்தியன்ஸ் அணியையும் இழுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

 

ஒரே நேரத்தில் ஆதாயம் தரும் இரு பதவிகளில் இருக்கக்கூடாது என்பது கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ விதிமுறைகளில் ஒன்றாகும். சவுரவ் கங்குலி வங்க கிரிக்கட் வாரிய தலைவர், ஐபிஎல் அணியான டில்லி கேபிடல்ஸ் ஆலோசகர் மற்றும் கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆகிய மூன்று பதவிகள் வகிப்பதாக புகார் எழுப்பப்பட்டது. இது குறித்து மத்தியஸ்த அதிகாரி (OMBUDSMAN) இடம் புகார் அளிக்கப்பட்டது,

விசாரணையில் சவுரவ் கங்கூலி எந்த பதவியிலும் ஊதியம் பெறவில்லை என்பதால் அவருக்கு தண்டனை ஏதும் வழங்கபடவில்லை,

தற்பொது சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராகவும் விவிஎஸ் லட்சுமண் ஐதராபாத் அணியின் ஆலோசகராகவும் பதவி வகித்து வருகின்றனர். இதை ஒட்டி மத்தியஸ்த அதிகாரி இருவருக்கும் நோட்டிஸ் அனுப்பினார்.  சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியின் விளம்பர தூதராகவும் கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் உள்ளதற்கு நோட்டிசில் விளக்க்ம கேட்கப்பட்டது.

இதற்கு சச்சின் 14 பக்க விளக்கத்தை அளித்தார்.  அந்த விளக்கத்தில் சச்சின், “இந்த புகார்களில் எவ்வித முகாந்திரமும் இல்லாததால் நான் இதை மறுக்கிறேன். எனக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திடம் இருந்து ஊதியமோ வேறெந்த பலனோ கிடையாது. அந்த அணியின் வீரர்கள் தேர்வு, முக்கிய முடிவுகள் ஆகிய எதிலும் எனது பங்கலிப்ப்பு கிடையாது. நான் இந்த அணிக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து வருகிறேன்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிசிசிஐ மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகி தலைமை பயிற்சியாளர் உள்ளிட்டோரிடம் இது குறித்து விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு சச்சின் டெண்டுல்கர் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.