தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கிரிக்கெட் வாரியம் வராது  : வினோத் ராய்

மும்பை

ந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வராது என தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பல கேள்விகள் எழுப்பப் பட்டன.   ஆனால் வாரியம் அவற்றுக்கு பதில் அளிக்க மறுத்து விட்டது.   இதை ஒட்டி கடந்த திங்கள் கிழமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தகவல் அறியும் சட்டத்டின் கீழ் கொண்டு வந்துள்ளதக மத்திய தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

 

நேற்று இது குறித்து வாரிய நிர்வாக தலைவர் வினோத் ராய் செய்தியாளர்களிடம் பேசினார்.   அப்போது, “இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அரசு நிறுவனம் அல்ல,  அரசிடம் நிதி உதவி பெறும் நிற்வனமும் அல்ல.   ஆகவே வாரியம் தகவல் அற்யும் சட்டத்தின் கீழ் வராது.   நாங்கள் ஏற்கனவே இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம்.

மத்திய தகவல் ஆணையத்திடமும் இந்த விவகாரம் நீதிமன்ற நிலுவையில் உள்ளதை தெரிவித்துள்ளோம்.   தவிர வாரியம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.   வீரர்களின் தேர்வு,  அவர்களுக்கு ஏற்படும் காயம், ஊக்க மருந்து தடுப்பு விவகாரம் உள்ளிட்டவைகள் தவிர மற்ற அனைத்தும் பொதுத் தளங்களில் வெளிப்படையாக வைக்கப்படுகிறது.” என வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

You may have missed