கொரோனாவை தடுப்பதில் பிசிஜி (BCG) தடுப்பூசி நல்ல பலன் அளிக்கிறது… இந்திய மருத்துவரின் ஆய்வு தகவல்கள்

லக்னோ: கொரோனாவை தடுப்பதில் பிசிஜி (BCG) தடுப்பூசி நல்ல பலன் அளிக்கிறது என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் உத்தரபிர மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் டாக்டர் ரேணு அகர்வால் என்பவரின்  ஆய்வு முடிவுகள்  அதை உறுதிப்படுத்தி உள்ளன. அவரது ஆய்வு முடிவுகள்  இந்தியன் ஜர்னல் ஆஃப் அப்ளைடு ரிசர்ச்சில் வெளியிடப்பட்டுள்ளன.

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரானாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இந்த உள்பட உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. 2021ம் ஆண்டுமுதல் கொரோனா தடுப்பூசிகள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், குழந்தைகளை காசநோயிலிருந்து (TB) பாதுகாக்கப் பயன்படும் பி.சி.ஜி தடுப்பூசி, கொரோனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது என்பது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

உத்தரபிரதேசத்தின் (Uttarpradesh) நொய்டாவில் உள்ள கொரோனா  மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர்  டாக்டர் ரேணு அகர்வால். இவர், கொரோனா நோயாளிகளுக்கு  பி.சி.ஜி தடுப்பூசி செலுத்தி அதன்மூலம் ஏராளமானோவரை குணமடையச் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. பிசிஜி  உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக பலப்படுத்துகிறது  என்பதை ஆய்வுகள் மூலம் நிரூபித்து உள்ளார்.

இவர் தனது ஆய்வுகளுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட  நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிசிஜி தடுப்பூசி செலுத்தி, அவர்களை கண்காணித்து வந்துள்ளார்.   இதில்,  எந்தவொரு நபருக்கும், எந்தவித பின்விளைவுகளும் ஏற்படவில்லை என்றும், அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தனர், பிசிஜி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக நல்ல பலன்களை கொடுத்துள்ளது என்று நிரூபணம் செய்துள்ளார்.

டாக்டர் ரேணு அகர்வால் ஆய்வுகள் குறித்து கூறப்பட்டுள்ளதாவது.

உ.பி. மாநிலத்தில்  தொடர்பான பணிக்காக, 80 ஊழியர்கள் கொண்ட குழு, மே 1ந்தேதி அன்று டாக்டர் ரேணு அகர்வால் அவர்களால் அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,  கொரோனாவுக்கு எதிரான  முதல் கட்ட ஆய்வாக,  நொய்டா மாவட்ட மருத்துவமனையில் கொரோனா தொற்று  நோயாளிகளை கவனிக்கும் பணியில் இருந்த 30 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களு  கடந்த  ஏப்ரல் மாதத்தில் பி.சி.ஜி கொடுக்கப்பட்டது.   இவர்களுடன் பிசிஜி எடுக்காத மற்ற 50 பேரும் கொரோனா பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். ஆனால்,  அவர்களில் பிசிஜி எடுத்தவர்களில் ஒருவர் கூட இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பிசிஜி எடுத்த மற்றும் எடுக்கா  அனைத்து ஊழியர்களுக்கும்  ஒவ்வொரு 15 வது நாளிலும் ஆர்டி-பி.சி.ஆர் (RT-PCR)  கருவிகளைக் கொண்டு தி கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு நடத்தப்பட்டது.

அதில், அடுத்த ஒரு மாதத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனையின்போது,  தடுப்பூசி போடாத 50 ஊழியர்களில், 16 பேர் தொற்றால்  பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. வேறு யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவிலலை. அதுபோல பிசிஜி எடுத்துக்கொண்ட நபர்களுக்கும் எந்தவித கொரோனா அறிகுறியும் தென்படவில்லை.

இதைத்தொடர்ந்து 2கட்ட சோதனைக்காக அடுத்தக்குழு அமைக்கப்பட்டது. இதில் 130 பேர் சேர்க்கப்பட்டனர்.  இவர்களில் 50பேர் தேர்வு செய்யப்பட்டு பிசிஜி தடுப்பூசி போடப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டது. மற்றவர்கள் தங்களது பணிகளை மேற்கொண்டனர். இதற்கிடையில் முதல்கட்டமாக பிசிஜி தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு மீண்டும் பிசிஆர் சோதனை நடத்தப்பட்டது.  அவர்களில் யாருக்கும் இதுவரை தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அதுபோல, இந்த குழுவின் தலைவரான  டாக்டர் அகர்வால், தானும் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும், தனக்கும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என தெளிவுபடுததி இருப்பதுடன்,  பி.சி.ஜி தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்களில் பெரும்பாலோருக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற கடுமையான நோய்களால் பாதிக்கப்படவர்கள். ஆனால்,  பி.சி.ஜி தடுப்பூசியின் பயன் ஒரு மாதத்திற்குப் பிறகும்  ஊழியர்களிடையே நல்ல பலனை கொடுத்திருப்பது தெரியவந்ததாகவும், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும் எந்தவொரு ஊழியரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பதையும், அவர்கள்  இன்றுவரை கொரோனா மருத்துவமனையில், கொரோனா தடுப்பு மணியில் பணியாற்றி வருவதாகவும்,  6 மாதங்களுக்கு மேலாகியும் அவர்களுக்கு எந்தவித கொரோனா அறிகுறியும் ஏற்படவில்லை. அவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அதற்கான ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.

பிசிசி தடுப்பூசி சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள டாக்டர் ரேணு அகர்வால்,  நமது நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியபோது, அமெரிக்கா, இங்கிலாந்து, இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள மருத்துவர்கள் சுகாதார ஊழியர்களுக்கு பி.சி.ஜி தடுப்பூசி கொடுத்து வந்தனர். அதையடுத்தே, தான் இந்த ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்ததாகவும், தனது ஆய்வுக்கு மருத்துவர்கள், மருத்துவக் குழுவினர் ஒத்துழைப்பு நல்கியதால்,  தனது தலைமையிலான மருத்துவமனையின் கொரோனா மருத்துவ  பணியாளர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து ஆராய்ச்சியைத் தொடங்கியதாக தெரிவித்து உள்ளார்.

டாக்டர் ரேணு அகர்வாலின் ஆய்வு  முடிவுகள் நவம்பர் 4 ஆம் தேதி அன்று இந்தியன் ஜர்னல் ஆஃப் அப்ளைடு ரிசர்ச்சில் வெளியிடப்பட்டுள்ளன.