வெளிநாட்டு வக்கீல்கள் இந்திய நீதிமன்றங்களில் பணிபுரிய கூடாது!! பார் கவுன்சில் நிராகரிப்பு!!

டில்லி:

இந்திய நீதிமன்றங்களில் வெளிநாட்டு வக்கீல்கள், சட்ட நிறுவனங்கள் ஆஜராகலாம் என்று நேற்று முன் தினம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய சட்ட கமிஷனின் 266வது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த வெளிநாட்டு வக்கீல்கள், சட்ட நிறுவனங்கள் இந்திய நீதிமன்றங்களில் பணியாற்றும் வகையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை பார் கவுன்சில் ஆப் இந்தியா நிராகரித்துள்ளது.

நாட்டில் உள்ள பல்வேறு பார் கவுன்சில்களுடன் கடந்த 2 தினங்களாக பார் கவுன்சில் ஆப் இந்தியா ஆலோசனை மேற்கொண்டது. வக்கீல்களுக்கு எதிரான நடைமுறையாக கருதி வெளிநாட்டு வக்கீல்கள் இ ந்தியாவில் பணியாற்றும் பரிந்துரையை பார் கவுன்சில் ஆப் இந்தியா ஒரு மனதாக நிராகரித்துள்ளது.
பிசிஐ செயலாளர் ஸ்ரீமன்டோ சென் கூறுகையில், ‘‘இந்த பரிசீலனையை ஏற்க வேண்டாம் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம்’’ என்றார்.

மேலும், மாநில பார் கவுன்சில்கள், இதர பார் கவுன்சில்கள், உயர்நீதிமன்ற பார்கள் ஆலோசனையுடன் வ க்கீல்கள் சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்வது தொடர்பான பரிந்துரைகளை பிசிஐ மத்திய சட்ட அமை ச்சகத்திற்கு அளிக்க வேண்டும் என்று பார் தலைவர்கள் முடிவு ªய்துள்ளனர்.

வக்கீல்கள் சட்ட திருத்தத்தில் பார் கவுன்சில்களின் கருத்துக்¬ளை கேட்டு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பிசிஐ, மத்திய சட்ட அமைச்கம், நீதிபதிகளுக்கு கடிதம் பார் கவுன்சில்களின் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.