அடுத்த மாதம் நடைபெற இருந்த பல் மருத்துவத் தேர்வு ஒத்திவைப்பு

டில்லி

ரும் செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற இருந்த பல் மருத்துவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

நாடெங்கும் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.

இதையொட்டி அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

பல மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் இறுதித் தேர்வைத் தவிர மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று பல் மருத்துவக் கல்வித் தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது.

அன்று பல் மருத்துவ பட்டப்படிப்பு (பி டி எஸ்) மற்றும் பட்ட மேற்படிப்பு (எம் டி எஸ்) ஆகிய தேர்வுகள் நடக்க இருந்தன.

இந்நிலையில் சுகாதாரத்துறை இந்த தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.