பி இ மாணவர் சேர்க்கை : தரவரிசை பட்டியல் வெளியிடும் தேதியில் மாறுதல்

ர்மபுரி

பி இ மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் வெளியிடும் தேதியை மாற்றி உள்ளதாக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் தெரிவித்துள்ளார்

பொறியியல் பட்டப்படிப்பான பி இ படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டுள்ள நிலையில் இதற்கான தர வரிசை பட்டியல் நாளை வெளிவரும் என அறிவிக்கப்பட்டது.

இன்று தர்மபுரியில் தமிழக உயர் கல்வித்துறை அமைசர் கே பி அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்து உரையாடினார். அப்போது அவர் பி இ கல்வி  மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் வரும் 20 ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்தார்.