தேர்தல் முடிவை மாற்ற மோடி எந்த நிலைக்கும் போவார்: வாக்கு எண்ணும் மையங்களில் கவனமாக இருக்க வேண்டும்: கே.எ.ஸ்.அழகிரி

சென்னை:

தேர்தல் முடிவை மாற்ற மோடி எந்த நிலைக்கும் போவார் என்று தெரிவித்த தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி,  வாக்கு எண்ணும் மையங்களில் காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர்  கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் இன்று காலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,   மத்தியில் மோடி இல்லாத அரசே ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில்,  தற்போது பல்வேறு தொலைக்காட்சிகளில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி வருகிறது. அதில்  பிஜேபி அணி வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பு வந்துள்ளது, இதுபோன்ற ஒரு பொய்யான கருத்துக்கணிப்பை ஏற்படுத்தி, முறைகேடு செய்ய பாஜக தீர்மானித்து உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

ஒருசில தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் என்றால் நம்பலாம் ஆனால் 100 தொகுதிகளில் வித்தியாசம் இருப்பதாக கூறப்படுகிறது.  இதை எப்படி கருத்துக்கணிப்பாக எடுத்துக்கொள்ள முடியும்.

எதிர்க்கட்சிகள் வரும் 23ந்தேதி கூடி பேச உள்ளார்கள். அதை மனத்தில் வைத்து இந்த கருத்துக் கணிப்புகள் வெளியாகி மக்களை குழப்பி வருகிறது என்று கூறியவர், தேர்தல்ஆணையத்தை கைக்குள் வைத்துள்ள மோடி, நாங்கள்  வெற்றிபெற வாயப் பில்லை என்று கூறி, சில தவறுகள் செய்வதற்கான முன்கூட்டியே  முறைகேட்டில் ஈடுபட  இந்த திட்டத்தை வகுத்துள்ளார்கள்.  எனவே வாக்குச் சாவடி பாதுகாப்பில் இருக்கும் முகவர்கள்,கூட்டணி கட்சியை சேர்ந்த முகவர் களும் மிகுந்த  கவனமாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மோடி ஜனநாயகத்தின்மீது நம்பிக்கையில்லாதவர், அவர் எந்த தவறையும் செய்வதற்கு தயாராக உள்ளார்.  தேர்தல் முடிவை மாற்ற அவர் எந்த வன்முறையிலோ, தவறான விஷயத்திலோ உறுதியாக இறங்குவார்.அவருக்கு மக்களிடமும் செல்வாக்கு இல்லை, பாஜகவிலும் செல்வாக்கு இல்லை.  அவர் எந்த நிலைக்கும் போவார், பாஜகவில் மோடி, அமித்ஷாவை தவிர அவர்களை ஆதரிப்பவர்கள் யாரும் இல்லை.அவர் அதிகார பலத்தை வைத்து பிரதமராக இருக்கிறார்.

இதை தேர்தல் ஆணையமே நமக்கு சுட்டிக்காட்டி உள்ளது. தேர்தல் ஆணைய உறுப்பினர் அசோக் லவாசா,  மோடி, அமித்ஷா மீதான அத்துமீறில்களை தலைமை தேர்தல் ஆணையர் ஏற்றுக் கொள்ளவில்லை. எனது கருத்தையும் பதிவு செய்யவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்து உள்ளார். . ஆணையத்தின் 3 உறுப்பினர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் அதை பதிவு செய்ய வேண்டும் பதிவு செய்யாமல் இருப்பது சர்வாதிகாரப்போக்கு. அவர்களிடையே ஒற்றுமையில்லாத நிலையில், வாக்கு எண்ணிக்கையில் நாம் கவனமாக இருக்க வேண்டும், இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் மிகுந்த கவனத்துடன் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்.

சென்னயில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது நான்நந்தனத்தில் இருக்கிறேன் அங்கு தண்ணீர் இல்லை. வரும் தண்ணீரும் ஏதோ ஒரு கலரில் இருக்கிறது அதில் குளித்தால் நோய் வரும் மக்களை பாதுகாக்கும் அரசாக இருந்தால் முன்னரே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் ஏரிகளை தூர்வார வில்லை அரசாங்கம் மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தவில்லை

லாரி மூலம் தண்ணீர் கொடுப்பது அவர்களுக்கு லாபகரமாக உள்ளது நான் அரசாங்கத்தை எச்சரிக்க விரும்புகிறேன் போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சனைக்கு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்