கூகுள் குரோம் எக்ஸ்டென்ஷன்களை பதிவிறக்கம் செய்யும் போது கவனம்… மத்தியஅரசு

டெல்லி:

பிரபல இணையதள பிரவுசரான கூகுள் குரோம் எக்ஸ்டென்ஷன்களை பதிவிறக்கம் செய்யும் போது கவனமாக செயல்பட வேண்டும் என்று மத்தியஅரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இணைய சேவையில் பிரபலமாக உள்ள கூகுள் நிறுவனத்தின் பிரவுசரான குரோம் பிரவுசர் உடன் பல்வேறு எக்ஸ்டென்கள் எனப்படும் இணைப்பு சாப்ட்வர்களும் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குரோம் பிரவுசர் மேலும் பல வசதிகளை பெற முடிகிறது.

ஆனால், இதுபோன்ற எக்ஸ்டன்சன்களை பதியும்போது, மேலும் சில ஸ்பை வேர், மால்வேர் போன்ற தேவையற்ற சாப்ட்வர்களும் தானாகவே இணைந்து செயல்படுவதை நாம் பார்த்திருப்போம். இதுபோன்ற தேவயைற்ற சாப்ட்வர்களை நாம் கவனமாக கையாண்டால்,  தவிர்த்திருக்க முடியும். ஆனால், பலர் அதை கண்டுகொள்ளாத நிலையில், சில நாட்களில் கம்ப்யூட்டர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதை காணமுடியும்.

இந்த நிலையில், பயனாளர்களின் தகவல்களைத் திருடும் மால்வேர்கள் அதில் இருப்பதாகவும், அதனால்,கூகுள் நிறுவனத்தின் கூகுள் குரோம் எக்ஸ்டென்ஷன்களை பதிவிறக்கம் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய அரசின் இணைய பாதுகாப்பு நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

சமீபத்தில்  பயனாளர்களின் தகவல்களைத் திருடும் 100க்கும் மேற்பட்ட தீங்கிழைக்கும் மால்வேர் இணைப்புகளை கூகுள் நிறுவனம் சமீபத்தில் அதிரடியாக நீக்கியது குறிப்பிடத்தக்கது.