விஜய் மல்லையா போல் ‘ஸ்மார்ட்டா’ வாழுங்கள்….பழங்குடி மக்களுக்கு மத்திய அமைச்சர் அறிவுரை

ஐதராபாத்:

தேசிய பழங்குடி இன தொழில் அதிபர்கள் மாநாடு ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜூவல் ஓரம் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘நாம் தொழில் அதிபர் ஆக வேண்டும். நாம் புத்திசாலி ஆக வேண்டும். நாம் மிடுக்காக வேண்டும். நாம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் விஜய் மல்லையாவை விமர்சிக்கிறீர்கள். ஆனால் விஜய் மல்லையா என்ன செய்தார்?. அவர் மிடுக்கானவர். அவர் புத்திசாலிகள் சிலரை வேலைக்கு அமர்த்தினார்.

அவர் இங்கேயும், அங்கேயும் வங்கிகளிடமும், அரசியல்வாதிகளிடம், அரசாங்கத்திடமும் சில காரியங்களை செய்தார். அவர் வங்கிகளில் கடன் வாங்கினார். உங்களை மிடுக்கு ஆவதில் இருந்து யார் தடுத்தார்கள்?.

அரசு அமைப்பில் ஆதிக்கம் செலுத்தாதீர்கள் என்று ஆதிவாசி மக்களை சொன்னது யார்?. வங்கியாளர்களிடம் செல்வாக்கை காட்டுவதில் இருந்து உங்களை யார் தடுத்தார்கள்?. கடின உழைப்பு அவசியம் இல்லை. மென்மையான உழைப்பு போதுமானது’’ என்றார்.