டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பாகும் Man Vs Wild நிகழ்ச்சி, உலகம் முழுவதும் அனைவரின் பாராட்டை பெற்றுள்ள நிகழ்ச்சி ஆகும்

இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ், அபாயகரமான உயிரினங்களை உயிரோடு உண்ணுவதில் திறமையானவர்.

சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்பெட் தேசியப்பூங்காவில் காட்டுக்குள்பிரதமர் மோடியுடன் பயணம் செய்துள்ளார். பிரதமர் மோடியை காட்டுக்குள் அழைத்துச் சென்றது என்னுடைய பாக்கியம் என்று டிஸ்கவரி சேனல் Man Vs Wild நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் கூறியுள்ளார்.

அந்த நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் 12 -ஆம் தேதி, இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.