ட்சத்திரக் கலைவிழா நடத்த மலேசியா வந்துள்ள தமிழ் நடிகர்களை, செருப்பால் அடித்து விரட்டுங்கள் என்று அந்நாட்டு தமிழ் இதழால மக்கள் ஓசை கட்டுரை எழுதியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த சமீபத்திய தேர்தலில் நடிகர் விசால் – நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தங்கள் பொறுப்புக்கு வந்தால் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவோம் என்று இந்த அணி வாக்குறுதி கொடுத்திருந்தது.

இதையடுத்து கட்டிட நிதி திரட்ட மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் கலை நிகழ்ச்சிகளை சங்கம் நடத்துகிறது. இதில் நடிகர் ரஜினி, கமல் உட்பட ஏராளமான நடிகர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் மலேசிய நாட்டில் வெளியாகும் “மக்கள் ஓசை” என்ற இதழ், “பாத்திரம் நிரப்ப பாத்திரம் ஏந்தும் தமிழ் நட்சத்திரங்கள்” என்னும் தலைப்பில்  இதழில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “ கோடி கோடியாக சம்பாதிக்கும் இந்த நடிகர்கள் தங்கள் பணத்தில் இருந்து கட்டிடம் கட்ட வேண்டியதுதானே!  இப்படி பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் தான் என்ன…? மக்களுக்காக இதுவரை இவர்கள் ஏதாவது நிகழ்ச்சி நடத்தி உதவியது உண்டா?

வருடா வருடம் அவாடு விழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தி கோடி கோடியாக அள்ளும இவர்கள், மக்கள் நலனுக்காக எதையுமே செய்ததில்லை. புயல் தாக்கம்,வெள்ள அழிவு போன்ற இயற்கை பேரிடர்களுக்கு நிகழ்ச்சி நடத்தி உதவாத இவர்கள் இன்று தமக்காக பிச்சையெடுக்க கிளம்பிவிட்டனர். இவர்களை செருப்பால் அடித்து விரட்டுங்கள்” என்று எழுதப்பட்டுள்ளது.