இந்தியாவில் பாலியல் வலை தளங்கள் முடக்கம் : போர்ன் ஹப் இணைய தளம் வருத்தம்

டில்லி

ந்தியாவில் பாலியல் வலை தளங்கள் மூடப்பட்டதால் இந்திய மக்களுக்கு சேவை அளிக்க முடியவில்லை என போர்ன் ஹப் வலை தளம் வருத்தம் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தொலை தொடர்புத் துறை இணய தள சேவை நிறுவனங்கள் 827 தளங்களை முடக்க வேண்டும் என உத்தரவிட்டது. அந்த தளங்களில் ஆட்சேபத்துக்குரிய காணொளிகள் உள்ளிட்டவை உள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதை ஒட்டி இந்த தளங்கள் உடனடியாக முடக்கப் பட்டன. இவற்றில் போர்ன் ஹப் என்னும் பாலியல் வலை தளமும் ஒன்றாகும்.

இது குறித்து அந்த வலை தளத்துக்கு பல ஈ மெயில்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதற்கு போர்ன் ஹப் வலை தளம் சார்பில் அதன் துணை தலைவர் கோரி பிரைஸ், “இந்திய அரசின் உத்தரவை தொடர்ந்து 827 தளங்களை இந்திய இணைய சேவை நிறுவனங்கள் முடக்கி உள்ளன. இதனால் நாங்கள் இந்திய மக்களுக்கு சேவையை அளிக்க முடியவிலை. இந்தியாவில் வயது வந்தோருக்கான திரைப்படங்களை தனிமையில் கண்டு களிப்பதை தடை செய்ய சட்டமில்லை.

இவ்வாறு எங்களைப் போன்ற வலை தளங்களை முடக்குவது என்பது சரியான தீர்வு கிடையாது. இதனால் நாங்கள் பலியாடுகள் ஆக்கப்பட்டது மட்டுமே உண்மையாகும். தற்போது இந்திய மக்கள் சட்ட விரோதமான வேறு சில வலை தளங்களை பார்வை இட தொடங்குவார்கள். அதனால் விவரம் திருடல் உள்ளிட்ட பல தீங்குகள் நேரிடும்” என தெரிவித்துல்ளார்.

போர்ன் ஹப் முன்பு வெளியிட்ட தகவலின் படி அந்த வலை தளங்களை காண்போர்களில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. அத்துடன் இத்தகைய வயது வந்தோருக்கான வலை தளங்களில் போர்ன் ஹப் முதல் 10 இடங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.