நூறு நாள் வேலை திட்டம் :  ஊதியம்  உயர்கிறது

டில்லி

நாடெங்கும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின்படி வழங்கப்படும் ஊதியம் 15 மாநிலங்களில் விவசாய கூலியை விட குறைவாக உள்ளது கண்டறியப்பட்டதால் விரைவில் உயர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின்படி அனத்து மாநிலங்களில் கிராமப் புறங்களில் 100 நாள் வேலைத் திட்டம் என்னும் பெயரில் வேலை வாய்ப்பு வழங்கப் படுகிறது,  இந்த வேலைத்திட்டத்தில் வழங்கப்படும் ஊதியம் 15 மாநிலங்களில், விவசாயக் கூலி வேலை செய்வோரின் ஊதியத்தை விட குறைவாக உள்ளது.

கர்நாடகா, ஜார்கண்ட், பஞ்சாப், உத்தரகாண்ட், மேற்கு வங்கம், மிஜோராம், அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய மாநிலங்களில் மிகவும் குறைவாகவும், சிக்கிம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, அரியானா, மத்திய பிரதேசம், பீகார், ஆகிய மாநிலங்களில் வித்தியாசம் இல்லாமலும், ராஜஸ்தான், மற்றும் ஹிமாசல பிரதேசத்தில் மிகவும் குறைவாகவும் உள்ளது.

இதன்படி, கிராம வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் நாகேஷ் சிங் ஊதிய உயர்வை இன்னும் ஒரு மாதத்தில் அறிவிப்பார்.  இதனால் வருடத்துக்கு ரூ 4500 கோடி கூடுதல் செலவாகும் என தெரிகிறது,

இந்த 100 நாள் வேலைத்திட்ட ஊதியம், அந்தந்த மாநிலங்களில் உள்ள விலைவாசியின் அடிப்படையில் அமையும் என தெரிகிறது,  இதனால் மாநிலத்துக்கு மாநிலம் ஊதியம் மாறுபடும் எனவும் தெரிய வருகிறது

 

கார்ட்டூன் கேலரி