ராகுலுக்கு வாழ்த்து தெரிவிக்காத மோடியின் ஈகோ : சிவசேனா கண்டனம்

மும்பை

கோவின் காரணமாக காங்கிரசின் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு ராகுல் காந்திக்கு மோடி வாழ்த்து தெரிவிக்கவில்லை என சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.

தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக எதிர்பாராத அளவு தோல்வி அடைந்துள்ளது. அதே நேரத்தில் பல இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசிடம் ஆட்சியை பறி கொடுத்த பாஜகவை குறித்து பல கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாஜகவின் முன்னாள் கூட்டாளியான சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னா ஒரு தலயங்கம் வெளியிட்டுள்ளது.

அந்த தலையங்கத்தில், “இந்த தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷாவும் மோடியும் காங்கிரஸ் இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்குவோம் என முழங்கினார்கள் அதே நேரத்தில் இந்த முழக்கத்தில் தொண்டர்கள் குரல் ஓங்கி ஒலிக்கவில்லை. அமித் ஷாவும் மோடியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒவ்வொரு கூட்டத்திலும் இரங்கல் செய்தியை கூறினார்கள். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உங்கள் கோட்டைக்குள் நுழைந்து உங்களை வென்றுள்ளார்.

இந்த தோல்வியினால் அநீதியும் பொய்களும் தோற்கடிக்கபட்டுளன. அத்துடன் அகங்காரம் நசுக்கப்பட்டு பெரும் கர்வம் வீழ்த்தப்பட்டுள்ளது. நமது நாட்டைப் பொறுத்தவரை தேர்தலில் வெற்றி பெற்றவரை தோல்வி அடைந்தவர் வாழ்த்துவது என்பது ஒரு மரபாகும். அந்த மரபு கடந்த 2014ஆம் ஆண்டும் முதல் அழிந்துள்ளது. பாஜகவில் யாரெல்லாம் கட்சியை கட்டமைத்தார்களோ அவர்கள் வெளியேற்றப்பட்டு சோதனைக்காலத்தில் துணையாக இருந்தவர்கள் எதிரிகளாக்கப்பட்டுள்ளனர்.

உங்களை கோபுரத்த்துக்கு ஏற்றிய மக்கள் அழிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நாட்டுக்கு தொழிலதிபர்கள் தேவை இல்லை என்பதால் பாஜக தற்போது தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது. ஆனால் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள மோடியின் ஈகோ தடுக்கிறது. அதனால் தான் அவர் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவிக்காமல் இருக்கிறார்.

கடந்த தேர்தலின் போது பாஜகவுக்கு கிடைத்த வெற்றியை ராக்ல் காந்தி பணிவுடன் ஏற்றுக் கொண்டார். ஆனால் மோடி நாட்டை கட்டமைக்க பாடுபட்ட ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தியின் பங்களிப்பை புறக்கணித்துள்ளார். அவ்வளவு ஏன் பாஜகவை கட்டமைத்த மூத்த தலைவர் அத்வானியையே மோடியால் ஏற்றுக் கொள முடியவில்லை. இந்த தேர்தலில் இருந்தாவது மோடி பணிவு குறித்து ராகுல் காந்தியிடம் இருந்த் பாடம் கற்பாரா?” என கேட்டுள்ளது.