லிஃபோர்னியா

லிஃபோர்னியாவில் விளைந்துள்ள பயிர்களை அறுவடை செய்ய ஆட்கள் பற்றாக்குறையினால் பயிர்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா விளைச்சல் குறைவினால் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் உள்ளது.  ஆனால் கலிஃபோர்னியாவில் விளைச்சல் அதிகமாகியும் அறுவடைக்கு போதிய ஆட்கள் இல்லாததால் பயிர்கள் அழிந்து உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் உள்ளது.

கலிஃபோர்னியாவில் உள்ள பண்ணை ஊழியர்கள் பெரும்பாலும், மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர்கள்.  அமெரிக்காவின் தற்போதைய வெளிநாட்டினர் பணியமர்த்தும் கொள்கையினால் பலரும் வேலை இழந்து மெக்சிகோ திரும்பி விட்டனர்.  அதனால் அறுவடைக்கு போதிய ஆட்கள் கிடைப்பதில்லை.  பண்ணை முதலாளிகள் ஊதியத்தை அதிகப்படுத்தி உள்ளனர்.  ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு ஊழியர்கள் கிடைக்கவில்லை.

இது கலிஃபோர்னியாவில் உள்ள நிலை மட்டுமே.  இதே போல் நாடெங்கும் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டால் உணவுப் பொருள் குறைந்து விலையேற்றம் அதிகமாகும் என மக்கள் அஞ்சுகின்றனர்.  பொதுவாக மழை இன்மை, மற்றும் வெள்ளம் மட்டுமே விவசாயிகளுக்கு நஷ்டத்தை தரும் என்பார்கள்.  ஆனால் அமெரிக்காவில் ஆட்கள் பற்றாக்குறையும் நஷ்டத்தை தருகின்றது.   கடந்த 2013லிருந்தே விவசாயிகளுக்கு வருமானம் குறைந்துள்ள நிலையில் இது மேலும் ஒரு சோதனையாகவே உள்ளது.