கோயிலாக மாறிய அப்பல்லோ மருத்துவமனை!

--

நெட்டிசன்: தனம் whatsup பதிவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் கிசிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் உடல் நலம் குறித்து பல்வேறு வதந்தி ஏற்பட்ட நிலையில் தமிழக முழுவதும் கட்சி தொண்டர்கள் முதல்வர் உடல் நிலை குறித்து அறிய ஆவலுடன் உள்ளனர்.

அப்போலோ மருத்துமனை சார்பில் முதல்வர் நலமுடன் இருக்கிறார் விரைவில் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார் காவி வேட்டிய கட்டிய அதிமுக தொண்டர். அவரது கைகளில் பூஜைக்குரிய பொருட்கள் இருந்தன.

இன்று அமாவாசை தினமானதால், அம்மாவுக்காக அமாவாசை பூஜை செய்வதாக கூறிய அவர் கொண்டு வந்த பொருட்களை மருத்துவமனை முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்தார்.

பூ, வெற்றிலை பாக்கு, பத்தி, எலுமிச்சம் பழம், தேங்காய், பூசனிக்காய் உடைத்து, திருஷ்டி சுத்தி கற்பூரம் காட்டி பூஜை செய்தார். மதியம் 12 மணி அளவில் இந்த பூஜையை வெற்றிகரமாக செய்து முடித்தார்.

போலீஸார் அவரை ஏதும் செய்ய முடியாமல்  திகைத்து நின்றனர்.