ஏர் இந்தியா விமானத்தில் மூட்டைப் பூச்சி கடித்து குழந்தை பாதிப்பு

--

மும்பை:

அமெரிக்காவின் நேவார்க் நகரில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அப்போது, விமான பயணிகள் இருக்கையில் இருந்த 8 மாத குழந்தையை மூட்டை பூச்சிகள் கடித்துள்ளது.

இதனால் குழந்தை நீண்ட நேரமாக அழுது கொண்டே இருந்தள்ளது. குழந்தையை தாய் சோதனை செய்து பார்த்தார். அப்போது குழந்தையின் உடலில் தடிப்புகளுடன் ரத்தம் கசிவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

‘‘மூட்டை பூச்சிகள் கடித்ததால் குழந்தைக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது’’ என்று குழந்தையின் பெற்றோர் ஏர் இந்தியா நிறுவனத்தில் புகார் செய்தனர். உரிய வடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தள்ளனர். ரூ.2 லட்சம் விமான கட்டணம் செலுத்தி பயணித்தாலும் மூட்டை பூச்சிகளிடம் இருந்து தப்பி முடியவில்லை என்று பயணிகள் வேததையுடன் தெரிவித்துள்ளனர்.