மாட்டு இறைச்சிக்கு தடை: மத்திய அரசை கண்டித்து 31ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை,

மாட்டு இறைச்சிக்கு தடை விதித்துள்ள மத்திய அரசை கண்டித்து நாளை மறுநாள் (31ந்தேதி) திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் இனிமேல் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய முடியாது என்று  மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய சட்ட திருத்தத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மாட்டு இறைச்சிக்கு தடை விதித்துள்ள மத்திய அரசை கண்டித்து நாளை மறுநாள் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாளை மறுதினம் (மே 31ந்தேதி) மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

அதன்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களில், அனைத்து தரப்பினரும் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

நாளை மறுதினம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக காங்கிரஸ் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.