கோழிக்கோடு

மீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மாடுகளை வெட்ட தடை சட்டத்தை எதிர்த்து கேரளா மாட்டுக்கறி விற்பவர் சங்கம் சொந்தமாக மாட்டுப்பண்ணை அமைக்க முடிவு செய்துள்ளது.

கேரளாவில் மாட்டுக்கறி விற்பனை அதிகம்.  அதை தடை செய்வதால் வருடத்துக்கு ரூ 6500 கோடி இழப்பும், சுமார் 5000 பேருக்கு வேலை இழப்பும் ஏற்படும் எனத் தெரிகிறது.  இதை தடுக்க கோழிக்கோட்டில் வியாபாரி – விவசாயி சமிதி மற்றும் சிஐடியு இரண்டும் சேர்ந்து ஒரு கூட்டம் நடத்தியது.

மாடுகளை வாங்கி வெட்ட சட்டம் தடை செய்துள்ளதால் தாங்களே சொந்தமாக மாட்டுப்பண்ணை அமைத்து அதில் மாடுகளை வளர்க்க திட்டமிட்டுள்ளது.  அதன்படி மாமிச வியாபாரிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மாட்டுப்பண்னை அமைக்க அரசிடம் உதவி கோரப்பட்டுள்ளது.  குறைந்த வட்டியில் அரசே மாட்டுப்பண்ணை அமைக்க கடன் உதவி செய்யவேண்டும் என்னும் கோரிக்கையும் எழுப்பப்பட்டுள்ளது.

கேரள முதல்வர் பிரணாயி விஜயன் ஏற்கனவே மத்திய அரசின் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளதால்,  இந்த திட்டத்துக்கு தேவையான உதவிகளை அரசு மூலம் செய்வார் என நம்பப்படுகிறது