கொல்கத்தா:

‘‘கோவாவில் சுற்றுலா பயணிகள் தாங்கள் விரும்பும் உணவு வகைகளை சாப்பிடலாம். கோவாவில் மாட்டு இறைச்சி தடை செய்யப்படவில்லை’’ என்று கொல்கத்தாவில் நடந்த சுற்றுலா கண்காட்சியில் கோவா சுற்றுலா துறை அமைச்சர் மனோகர் அஜ்கன்கார் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘கால்நடைகள் இறைச்சிக்காக விற்பனை செய்ய மத்திய அரசு விதித்த தடை உத்தரவு சுற்றுலா துறையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை’’ என்றார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், ‘‘கோவாவில் இந்துக்கள், முஸ்லிம்கள், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக பல ஆண்டுகளாக வசிக்கின்றனர். இங்கு இனவாத ஒற்றுமையான சூழல் நிலவுகிறது. ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டதால் கோவா சுற்றுலா பாதிக்கவில்லை. கோவாவில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

சுற்றுலா கட்டமைப்புகளை மேற்கொள்ள மத்திய அரசு ரூ. ௧௦௦ கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநில அரசு மேலும் ரூ. ௫௦ கோடி முதலீடு செய்கிறது. இத மார்கெட்டிங் மற்றும் விளம்பரங்களுக்காக செலவிடப்படும். சுற்றுலா துறை சார்பில் பல விதமான கழிப்பிடங்கள், ஆடை மாற்றும் அறைகள், குளியல் அறைகள் உள்ளிட்ட இதர அத்தியாவசிய பணிகள் பயணிகள் வசதிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார்.