Random image

இந்திய கிரிக்கெட் அணியினருக்கு மாட்டுக்கறியா? : டிவிட்டரில் சர்ச்சை

ண்டன்

ண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் டெஸ்ட் பந்தயத்தின் மூன்றாம் நாளில் வீரர்களுக்கு மாட்டுக்கறி வழங்கப்பட்டுள்ளது

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.    இந்த அணி தனது இரண்டாவது டெஸ்ட் பந்தயத்தில் இங்கிலாந்து அணியுடன் மோதி வருகிறது.   இந்த டெஸ்ட் பந்தயத்தின் மூன்றாம் நாளில் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் டிவிட்டரில் வெளியிடுள்ளது.

அதில் ஒரு உணவுப் பொருளாக மாட்டிறைச்சி அடங்கிய பாஸ்தாவும் இடம் பெற்றுள்ளது.   இந்த உணவுப் பட்டியல் என்பது இரு அணிகளுக்கும் பொதுவானது என்றாலும் இந்த பட்டியலில் மாட்டிறைச்சி இடம் பெற்றிருப்பது டிவிட்டரில் கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

அத்துடன் இந்த உணவு வகைகள் பஃபே எனப்படும் தானே எடுத்துக் கொள்ளும் முறையில் அளிக்கப்படுவதால் இந்த மாட்டிறைச்சியை இந்திய வீரர்கள் சாப்பிட்டே ஆக வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் கூறப்படுகிறது.    ஆயினும் டிவிட்டரில் பலர் இந்த மாட்டிறைச்சி இடம் பெற்றதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.