குர்காவ்

டில்லிக்கு அருகில் உள்ள குர்காவ் பகுதியில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் கோடையில் மக்கள் வார இறுதியை கொண்டாட முடியாமல் தவித்துப் போயினர்.

குர்காவ் பகுதியில் பல தொழிற்பேட்டைகள் அமைந்துள்ளன.   உழைக்கும் மக்கள் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் உள்ள பப்புகளும் பார்களும் வார இறுதியில் கூட்டமாக காணப்படும்.   தற்போது நாடெங்கும் கோடைக்காலம் தொடங்கிய நிலையில்,  வார இறுதியில் பீர் அருந்தும் மேற்கத்திய கலாசாரத்தை குர்காவ் மக்களும் பின்பற்றுகின்றனர்.

இந்தப் பகுதிக்கு மதுத் தொழிற்சாலையில் இருண்டு பீர் வருவது கடந்த 5 நாட்களாம குறைய தொடங்கி உள்ளது.   அது தற்போது முழுவதுமாக நின்று விட்டது.   அதனால் ‘குடிமகன்’கள் பீர் இன்றி காய்ந்து போனார்கள்.     வழக்கமாக வார இறுதிகளில் உட்கார இருக்கை கிடைக்காமல் கூட்டம் நிரம்பி வழியும் பப்புகளும் பார்களும் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி போயின

இது குறித்து குர்காவ் செக்டர் 9 ல் உள்ள ஒரு பப் உரிமையாளர், “பீர் வருவது நின்று போனதற்கு காரணம்  கலால் துறைக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையில் ஏதோ தகராறு என நினைக்கிறேன்.    இது குறித்து எந்த தெளிவான தகவலும் இல்லை.   என்னிடம் இருந்த பீர் முழுவதும் வெள்ளி அன்று மாலை விற்றுப் போய் விட்டது.   நான் வெளியில் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கி சனிக்கிழமை கடையை நடத்தினேன்.  நேற்று அங்கும் சரக்கு இல்லை” என தெரிவித்தார்.

யூனியன் பிரதேசமான டில்லி அருகில் உள்ளதாலும் அங்கு எக்சைஸ் தீர்வை குறைவாக இருப்பதாலும் இங்கு அதிகம் மது பானங்கள் சப்ளை செய்வதில்லை என மேலும் சில மதுக்கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.   அதனால் தான் கலால் துறைக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையில் தகராறு நிலவுவதாக விற்பனையாளர் ஒருவர் கூறி உள்ளார்.

இது குறித்து கலால் துறை அதிகாரி ஒருவர் பேச்சு வார்த்தை நடைபெறுவதாகவும் விரைவில் குர்காவ் பகுதியில் மதுத் தட்டுப்பாடு நீங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.