பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் பீர் விலை 25 சதவீதமும், மதுபான உற்பத்தியில் கலால் வரி, இரு மடங்காகவும் உயர்த்தப்பட்டிருப்பதாக பட்ஜெட் உரையில் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.


கர்நாடக முதல்வர் குமாரசாமியிடமே நிதித்துறையும் உள்ளது. ஆட்சிக்கு வந்தபின் முதல் பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார்.

அப்போது அவர் கூறும்போது, அரசுக்கு வருவாயை திரட்டும் வகையில், பீர் விலை 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்,  மதுபான உற்பத்திக்கு விதிக்கப்படும் கலால் வரி, இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த விலை உயர்வு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்று தெரிவித்த அவர், இதன் மூலம் 20 ஆயிரத்து 950 ரூபாய் கூடுதல் வருவாய் அரசுக்கு கிடைக்கும் என்று தெரிவித்தார்.

இதுவரை இல்லாத வகையில் பீர் விலை உயர்த்தப்பட்டாலும், மற்ற மதுபானங்கள் விலையில் பெரிய மாற்றம் ஏது செய்யப்படவில்லை.

முதல்வர் குமாரசாமியின் பட்ஜெட் உரையை எதிர்த்து, எதிர்கட்சித் தலைவர் எடியூரப்பா தலைமையிலான பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.