பாக்கிஸ்தான்: சுதந்திர தினத்திற்கு முன்பாக இன்ரான் கான் பதவி ஏற்பு ?

பாக்கிஸ்தான் சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு முன்பாகவே அந்நாட்டின் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாக தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை பாக்கிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனுடன் சேர்ந்து பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்கவா மாகாணங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டன. இந்த தேர்தலில் பாக்கிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி 270 இடங்களுக்கு 117 இடங்களில் வெற்றி பெற்றது.

imran

நவாஸ் கட்சி 62 இடங்களிலும், பிபிபி கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கு 137 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற சூழலில் சில கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவை பெற இம்ரான் கான் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்

சிறிய கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் இம்ரான் கான் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு முன்பாகவே இம்ரான் பதவி ஏற்பார் என்று தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் செய்தி தொடர்பாளர் நேமுல் ஹவக் கூறும்போது, ” நாங்கள் தொடர்ந்து சுயட்சி வேட்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் விரைவில் எங்களுடன் இணைவார்கள்” என்று தெரிவித்தார்.

பாக்கிஸ்தான் பொதுத் தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ), ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்), முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ மகன் பிலவல் புட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி), மதவாதக் கட்சிகளை உள்ளடக்கிய முத்தாஹிதா மஜ்லிஸ்-இ-அமால் (எம்எம்ஏ) கூட்டணி, அவாமி தேசிய கட்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் போட்டியிட்டன.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-