சாகறதுக்குள்ள பேரனை பார்க்கணும்! ஏங்கும் கிரிக்கெட் வீரர் பும்ராவின் தாத்தா!

அகமதாபாத்,

‘நான் இறப்பதற்குள் என் பேரனை நேரில் பார்க்க வேண்டும்’ என்று உருக்கமாகக் கூறியிருக்கிறார், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவின் தாத்தா.

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் பும்ரா. இவர்  குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர், யார்க்கர் பந்து வீசுவதில் வல்லவர்.

இவரது தாத்தாவான 84 வயதான  சண்டோக் சிங், தற்போது . உத்தரகாண்டில் ஆட்டோ ரிக் ஷா ஓட்டி வாழ்க்கை நடத்தி வருகிறார்.

தொடக்க காலத்தில் ஆகமபாத்தில் பல்வேறு வணிக நிறுவனங்களை நடத்தி வந்துள்ள சண்டோக் சிங், புப்ராவின் அப்பா மறைவுக்கு பிறகு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் உத்தரகாண்டுக்கு வந்துவிட்டதாக கூறி உள்ளார்.

இங்கும் முதலில் வேன்களை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தி வந்ததாகவும், அதுவும் நஷ்ட மடைந்ததால், தற்போது ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்தி வருவதாகவும் கூறி உள்ளார்.

இவர் தனது பேரன் பும்ரா குறித்து கூறும்போது, சின்ன வயசுலயே பிரமாதமா கிரிக்கெட் ஆடுவான் என் பேரன் என்றும்,  ஐபிஎல் போட்டிகள்ல அவனை டிவியில பார்க்கும்போது பெருமையா இருக்கும் என்றார்.

மேலும், அந்திய அணியில வேற இடம்பிடிச்சிருக்கிற  அவன் நல்லா வரணும்னு நான் பிரார்த்தனை பண்ணிக்கிட்டே இருக்கேன் என்றார்.

மேலும் தங்களது குடும்பம் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்றும்,  நான் சாகறதுக்குள்ள என் பேரனை (பும்ராவை)  நேர்ல பார்க்கணும். இதுதான் இப்போதைக்கு என் ஆசை’ என்று கூறி உள்ளார்.

தாத்தாவின்  கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது அவரது குடும்பம்.