டில்லி

றப்பதற்கு  முன்பு  வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே க்கு அளிக்க வேண்டிய வழக்கறிஞர் கட்டணம் ரூ1 ஐ அளிக்க உள்ளதாக சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அரசு குல்புஷன் ஜாதவை உளவு பார்த்ததாகக் கூறி கைது செய்து வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் குல்பூஷன் ஜாதவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து இந்திய அரசு சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஆஜரான பிரபல வழக்கறிஞர்  ஹரீஷ் சால்வே இதற்குக் கட்டணமாக ரூ.1 மட்டும் போதும் எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் குல்பூஷன் ஜாதவ் குற்றமற்றவர்  எனவும் அவருக்கு பாகிஸ்தானால் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்தும் தீர்ப்பு அளித்தது. அதையொட்டி அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என நம்பிக்கை பிறந்துள்ளது. இந்த தீர்ப்புக்கு முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் வரவேற்பு தெரிவித்திருந்தார்.

நேற்று இரவு சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் காலமானார். அதற்கு முன்பு அவர் வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே உடன் தொலைபேசியில் பேசி உள்ளார். இது  குறித்து சால்வே, “நேற்று இரவு சுமார் 8.50 மணிக்கு என்னிடம் சுஷ்மா தொலைபேசியில் உரையாடினார். அது உணர்ச்சிகரமான உரையாடல் ஆகும். அவர் என்னை இன்று காலை 6 மணிக்கு சந்திப்பதாகவும் எனக்கு வழக்கறிஞர் கட்டணமாக ரூ.1 அளிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.” என வருத்தத்துடன் கூறி உள்ளார்