பிரதமர் மோடி 500,1000 நோட்டுக்களை தடை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சி பல கோடி ரூபாய்களுக்கு நிலங்களை வாங்கி போட்டதாக புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

bjp_land_loot

PhotoCredit: Arya Sharma | CatchNews

பிரதமர் மோடி ரூபாய் நோட்டுக்களை தடை செய்தது நவம்பர் 8 அன்று. ஆனால் நவம்பர் முதல் வாரத்தில் பீகார் மாநிலத்தில் பல இடங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிலம் வாங்கப்பட்டதாக கேட்ச்நியூஸ் என்ற இணையதள செய்தி கூறுகிறது. இந்த இணையதளம் புலனாய்வு செய்து பீகாரில் 10 இடங்களில் பாஜக நிலம் வாங்கியதை உறுதி செய்துள்ளது. அதில் சில இடங்களில் பாஜக தலைவர் அமித்ஷாவுக்காக வாங்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்த நிலங்கள் பாஜகவை சேர்ந்த பீகார் மாநில சட்டமன்ற உறுப்பினர் சஞ்சீவ் சாருசியா என்பவரது முயற்சியால் வாங்கப்பட்டுள்ளது. பீகாரில் மதுபானி, கடிஹர், மதேபுரா, லகிசரை, கிஷன்கஞ்ச் ,அற்றும் அர்வால் ஆகிய நகரங்களில் நிலம் வாங்கப்பட்டிருக்கிறது. பீகாரில் மட்டுமல்லாது வேறு சில மாநிலங்களிலும் வாங்கப்பட்டதாக தெரிகிறது. நிலம் வாங்கப்பட்டது தனிநபருக்காக அல்ல இந்த இடங்களில் கட்சி அலுவலகமோ அல்லது கட்சி சார்ந்த வேறு பணிகளோ நடக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார்.
இந்த நில வியாபாரத்தில் பணம் எப்படி பரிமாறப்பட்டது காசோலையாகவா அல்லது பணமாகவா? என்ற கேள்விக்கு காசோலை பணம் இன்னும் பல வழிமுறைகள் மூலமாக பணம் பரிமாறபப்ட்டது என்று அவர் தெரிவித்தார்.
நிலம் 250 சதுர அடியிலிருந்து அரை ஏக்கர் வரை வாங்கப்பட்டதாகவும், இவற்றின் மதிப்பு ரூ.8 லட்சத்திலிருந்து 1.16 கோடி வரை இருக்கும் என்றும் தெரியவருகிறது.