புல்வாமா தாக்குதலுக்கு முன்புகூட, சிஆர்பிஎஃப் படையினருக்கு ஊதிய உயர்வு தர மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி:

புல்வாமா தாக்குதலுக்கு முன்புகூட, சிஆர்பிஎஃப் படையினருக்கு ஊதிய உயர்வு தர மத்திய அரசு மறுத்துவிட்டதாக, முன்னாள் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


இது குறித்து முன்னாள் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது:

சிஆர்பிஎஃப் வீரர்கள் ராணுவத்துக்கு இணையாக நடத்தப்படுவதில்லை. அவசர காலத்தில் முதலில் களத்தில் நிற்பவர்கள் சிஆர்பிஎஃப் வீரர்கள். ஆனால் அவர்களை சரிவர நடத்துவதில்லை.

ராணுவ வீரரைவிட 50 சதவீத சம்பளம் குறைவாகவே அதே ரேங்கில் உள்ள சிபிஆர்எஃப் வீரருக்கு தரப்படுகிறது. இந்த வித்தியாசம் பென்ஷனிலும் எதிரொலிக்கிறது.

சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பதவி உயர்வும் கிடைப்பதில்லை. புல்வாமா தாக்குதலுக்கு முன்புகூட, சிஆர்பிஎஃப் படையினருக்கு ஊதிய உயர்வு தர மத்திய அரசு மறுத்துவிட்டது.

புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் தற்கொலைப் படையினரால் உயிரிழந்ததற்கு, பாதுகாப்பு குறைபாடே காரணம் என்றனர்.