கொழும்பு

லங்கையின் தலைநகரான கொழும்புவில் வரும் புத்தாண்டு முதல் பிச்சை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் பிச்சைக்காரர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.    ஒரு கணக்கெடுப்பில் சுமார் 600க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் நகரில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.   இலங்கை சமூக மேம்பாட்டு அமைச்சகம் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் நடத்திய கணக்கெடுப்பில் இது தெரிய வந்துள்ளது.     தற்போது இலங்கை அரசின் வளர்ச்சி மேம்பாட்டுத்துறை அமைச்சர் சம்பிகா ரணவகா ஒரு அரசு ஆணை பிறப்பித்துள்ளார்.

அவர், “வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் கொழும்பு நகரில் பிச்சை எடுப்பது நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளது.   சந்தர்ப்ப சூழ்நிலையால் பிச்சை எடுப்பவர்களிடம் இந்த அரசு அன்புடனும் கனிவுடனும் நடந்துக் கொள்ளும்.    அவர்களுக்கான மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.   பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு கல்வி வசதி அளிக்கப்படும் உடல்நிலை பாதிக்கப்படவர்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்படும்   ஆனால் இதையே ஒரு பிழைப்பாக வைத்துள்ளவர்கள் மீது கடுமையான தனடனை வழங்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.