பணமதிப்பிறக்க அறிவிப்புக்கு பின்னால் சி.ஐ.ஏ.,வா?

--

டெல்லி:

அமெரிக்க அரசின் மேம்பாட்டு முகமையுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் பணமதிப்பிறக்க அறிவிப்பை மோடி வெளியிட்டதாக தற்போது தகவல்கள வந்துள்ளது. இதற்கு பின்னால் சி.ஐ.ஏ.வுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். 80 சதவீதக்கு மேல் புழக்கத்தில் இருந்த இந்த ரூபாய் நோட்டுக்களை திடீரென ஒரே அறிவிப்பில் செல்லாது என்றானது. இந்த அறிவிப்புக்கு பின்னால் அமெரிக்காவுக்கு தொடர்பு இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
வெளியுறவு கொள்கையில் இந்தியாவுடன் கூட்டு இருப்பதாக ஒபாமா அறிவித்தார். இந்த புதிய கூட்டு ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அரசின் மேம்பாட்டு முகமை (யுஸ்ஏஐடி) இந்திய நிதியமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு ப குதியாக இந்தியாவிலும், உலகளவிலும் ரொக்கத்தை பின்னுக்கு தள்ளி டிஜிட்டல் பரிவர்த்தனையை கொண்டு வர பணமதிப்பிறக்க அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான ஒரு மாதத்தில் அமெரிக்க அரசின் மேம்பாட்டு முகமை (யுஎஸ்ஏஐடி) ‘கேடலிஸ்ட்’ என்ற அமைப்பின் உருவாக்கத்தை அறிவித்தது. இதில் ரொக்கமில்லா பணி பரிவர்த்தனைக்கான கூட்டாண்மையாகும். அக்டோபர் 14ம் தேதி வெளிய £ன ஒரு அறிக்கையின் மூலம், அமெரிக்க மேம்பாட்டு முகமையும், மத்திய நிதியமைச்சகமும் சர்வதேச அளவிலான நிதிசேர் க்கையை ஏற்படுத்துவதற்கு அடுத்த கட்ட நகர்வாக இருந்தது.

இது தொடர்பாக அமெரிக்க அரசின் மேம்பாட்டு முகமையின் (யுஎஸ்ஏஐடி) இணையதளத்தில் வெளியான எந்த அறிவிப்பும் முழு தகவலுடன் வெளியாகவில்லை. எந்த இடத்திலும் இந்தியா என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை. இந்த தகவல் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்பட்டது.
கேட்டலிஸ்ட் அமைப்பின் திட்ட செயல் இயக்குனராக இருப்பவர் அலோக் குப்தா. இவர் வாஷிங்டன்னில் உள்ள உலக வள மைய தலைமை இயக்குதல் அதிகாரியாகவும் உள்ளார். இதற்கு யுஎஸ்ஏஐடி முக்கிய ஸ்பான்சராக இருக்கிறது. மேலும், இவர் ஆதார் மேம்பாட்டு குழு உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க மேம்பாட்டு முகமை அடுத்த 3 ஆண்டுகளுக்கு கேட்டலிஸ்ட் அமைப்புக்கு நிதியுதவி அளிக்கவுள்ளது. தொகை எவ்வளவு என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ‘ஸ்னாப் டீல்’ நிறுவன துணைத் தலைவராக இருந்த பதால் மாலிக் கேட்டலிஸ் தலைமை செயல் அதிகாரியாக நியமிப்பத்றகு முன் கூறிய கருத்துக்கள்..
கேட்டலிஸ்ட் என்பது பல்முனை ஒருங்கிணைப்பில் உள்ள பிரச்னைக்கு தீர்வாக அமையும். வர்த்தகர்களுக்கும், குறைந்த வருவாய் உள்ள மக்களுக்கும் இடையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊடுறுவலை தடுக்கும் அடைப்புகளை இது சரி செய்யும்.. என்று கூறியிருந்தார்.
ரொக்கத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த போருக்கு பின்னால் அமெரிக்கா இருக்கிறது. இந்தியாவை சேர்ந்த 35 முக்கிய நபர்கள், அமெரிக்கா மற்றும் சர்வதே அமைப்புகள், நிதியமைச்சகம், அமெரிக்காவின் மேம்பாட்டு முகமை ஆகியவை கூட்டணி அமைத்திருப்பதாக கேட்டலிஸ்ட் அறிவிப்பு வெளியிட்டது.
அமெரிக்காவுடன் ரகசியமாக கைகோர்த்துக் கொண்ட நரேந்திரமோடி பணமதிப்பிறக்க அறிவிப்பை வெளியிட்டு கடந்த 50 நாட்களாக இந்தியர்களை அலைகழித்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. கறுப்பு பணம் ஒழிப்பு, கள்ள ரூபாய் நோட்டு ஒழிப்பு என்று மோடி நாடகமாடியது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த செயலுக்கு பின்னால் மத்திய புலனாய்வு மையத்துக்கு (சிஐஏ) தொடர்பு இருக்கிறதா என்பதை அமெரிக்க அரசின் மேம்பாட்டு மையம் தான் (யுஎஸ்ஏஐடி) தெரிவிக்க வேண்டும்.

ரகுராம் ராஜன் எதிர்ப்பு 

ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் சர்வதேச அளவில் பொருளாதார வல்லுனராக திகழ்ந்தவர். கட்டுப்படுத்தப்பட் பணயவியல் கொள்கையை அவர் தீவிரமாக எதிர்த்தார். அதனால் இவருக்கு உற்பத்தி சார்ந்த தொழில் துறையில் இருந்து எதிர்ப்பு இருந்து வந்தது. ரிசர்வ் வங்கி கவர்னராக மேலும் ஒரு முறை பதவி வகிக்க அவர் விரும்பவில்லை என்று கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.
அதன் பின்னர், ரிசர்வ் வங்கி கவர்னராக அடுத்த ஒரு காலத்திற்கு முழுமையாக நிறைவு செய்வதை மோடி விரும்பவில்லை என்று ரகுராம் ராஜன் நியூயார்க் டைம்ஸ் இதழிடம் கூறியிருந்தார்.

இவரது வெளியேற்றத்தால் தொழிலதிபர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று முன்னாள் மத்திய வர்த்தகம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சுப்ரமணியன் சுவாமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://norberthaering.de/en/home/27-german/news/745-washington-s-role-in-india

 

English Summary

Is the Pact with USAID cause for the demonetisation ? Has CIA played an important role behind demonetisation in india ? to increase the revenue for US based Payment companies cause for Demonetization ?