நடிகைகள் பொது அடையாளம் தானே தவிர பொதுச்சொத்து அல்ல : ஊடகங்களை வறுத்தெடுத்த இந்தி நடிகை..

 

எந்த ஒரு விவகாரமானாலும் சினிமா நட்சத்திரங்களிடம் கருத்து கேட்பதை ஊடகங்கள் வாடிக்கையாக வைத்துள்ளன.

இதனை இந்த நடிகை கீர்த்தி குல்ஹரி என்பவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிங்க், இந்து சர்க்கார், மிஷன் மங்கள், ஊரி- தி சர்ஜிகல் ஸ்டிரைக் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கீர்த்தி இது குறித்து அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:

“எல்லா விஷயங்களும் எனக்கு தெரியாது, எனது தொழில் நடிப்பு, சினிமா குறித்து கேட்டால் பதில் சொல்வேன். ஆனால் நாட்டில் நடக்கும் எல்லா பிரச்சினைகள் குறித்தும் நடிகைகளிடம் ஊடகங்கள் கருத்து கேட்பது சங்கடமாக இருக்கிறது.

அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் பற்றி என்னை போன்ற சினிமாக்காரர்களிடம் கருத்து கேட்காதீர்கள்.

நாங்கள் பொது அடையாளம் தானே தவிர, பொதுச்சொத்து அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்” என விளாசி தள்ளி விட்டார் நடிகை கீர்த்தி குல்ஹரி.

– பா. பாரதி