உலககோப்பை ஹாக்கி 2018 பட்டத்தை வென்றது பெல்ஜியம் அணி..!

உலக கோப்பை ஹாக்கி தொடரில் பெனால்டி ஷூட் முறையில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி பெல்ஜியம் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

belgium

14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்தது. இதில் இந்தியா உட்பட 16 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு விளையாடி வந்தன. லீக், காலிறுதி மற்று அரையிறுதி சுற்றுகள் முடிந்த நிலையில் இன்று மூன்றாவது இடத்திற்கும், இறுதி போட்டியும் நடைபெற்றன.

மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இங்கிலாந்து அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின. இந்த போட்டியில் 8-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணையை வீழ்த்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றது. இதை தொடர்ந்து அந்த அணி 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றது.

இதனை தொடர்ந்து உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணிக்கான இறுதி போடியில் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இரு அணிகளும் அனல் பறக்கும் ஆட்டத்தையே வெளிப்படுத்தின. இதன் காரணமாக ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

இந்நிலையில் பெனால்டி ஷூட் முறை கொண்டுவரப்பட்டது. இதில் பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றிப்பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பெல்ஜியம் அணி உலகக் கோப்பையை வென்றது. இந்த போட்டியை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உடன் ஒன்றாக அமர்ந்து பார்த்து ரசித்தார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-