புதுடெல்லி:

பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் மீண்டும் பணிக்கு விண்ணப்பித்தால், அது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கவுரவ குறைச்சலை ஏற்படுத்தும் என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அல் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

‘மக்கள் சேவகன் மட்டுமல்ல’ என்ற நூலை மத்திய அரசின் முன்னாள் செயலர் அனில் ஸ்வரூப் வெளியிடவுள்ளார்.

இது குறித்து அவர் ‘தி பிரிண்ட்’ இணையத்துக்கு அளித்த பேட்டியில், ” ஓய்வு பெற்றபின் அரசுப் பணிக்கு நான் விண்ணப்பிக்கவில்லை. அதை நான் விரும்பவில்லை. மூத்த அதிகாரி ஒருவர் ஓய்வு பெற்ற பின், பணிக்கு விண்ணப்பிப்பது கவுரவக் குறைச்சலாக  பார்க்கின்றேன்.

38 ஆண்டுகள் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அனுபவத்தை இந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளேன். அரசியல் சூழ்நிலைகள் தடுத்தாலும், அரசு அதிகாரியால் மக்களுக்கு நன்மையை செய்ய முடியும்.

பிரதமர் மோடி பிறப்பிக்கும் உத்தரவுகள் தெளிவாக இருக்கும். அதிகாரிகளின் பணியில் அவர் குறுக்கிட்டதில்லை. சிபிஐ விவகாரம் வலியை ஏற்படுத்துகிறது. அலோக் வர்மாவும், ராகேஸ் அஸ்தானாவும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய விவகாரம், சிபிஐ&ல் ஏற்பட்ட நிகழ்வுகள் துரதிஷ்டமானவை.

அங்கு நடந்தது அதிகாரிகளுக்கிடையேயான பிரச்சினை. அதில் அரசியல்வாதிகள் சம்பந்தப்படவில்லை என்றார்.