‍கிரிக்கெட்டின் ‘டபுள்’ – சாதித்தார் பென் ஸ்டோக்ஸ்!

லண்டன்: கிரிக்கெட் போட்டியில் ‘டபுள்’ என்று குறிப்பிடப்படும் இரட்டை சாதனையான 4000 ரன்கள் & 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ்.

இந்த சாதனையை வேகமாக செய்துகாட்டிய இரண்டாவது ஆல்ரவுண்டர் என்ற பெருமையைப் பெற்றார் இவர்.

தற்போது விண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில், தன் சார்பாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், 150 விக்கெட் என்ற இலக்கை எட்டியுள்ளார் ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ்.

இதன்மூலம், இங்கிலாந்து அணியின் மற்றொரு ஆல்ரவுண்டர் இயான் போத்தமுடன் இணைந்துள்ளார் ஸ்டோக்ஸ். இந்த சாதனையை செய்ய 64 ஆட்டங்களை எடுத்துக்கொண்டுள்ளார் ஸ்டோக்ஸ்.

இதே சாதனைப் பட்டியலில், கபில் தேவ், ஜாக் காலிஸ், கேரி சோபர்ஸ் மற்றும் டேனியல் வெட்டோரி ஆகியோரும் ஏற்கனவே இணைந்துள்ளனர்.