ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசை – முதலிடம் பெற்றார் பென் ஸ்டோக்ஸ்!

துபாய்: விண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதையடுத்து, ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்திற்கு முன்னேறினார்.

இதற்கு முன்னர் இரண்டாமிடத்திலிருந்து பென் ஸ்டோக்ஸ், மொத்தம் 497 புள்ளிகளைப் பெற்று முதலிடததிற்கு முன்னேறியுள்ளார்.

இதற்கு முன்பாக, ஆல்ரவுண்டர் தரவரிசையில் இருந்த விண்டீஸ் அணி கேப்டன் ஜேஸன் ஹோல்டர் 459 புள்ளிகளை மட்டுமே பெற்று இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டார். டெஸ்ட் தரவரிசையில், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஒருவர் முதலிடம் பெறுவதானது, 14 ஆண்டுகளுக்குப் பிறகு இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், கடந்த 2008ம் ஆண்டு, டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் தென்னாப்பிரிக்காவின் காலிஸ் மொத்தம் 517 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தார். அதன்பிறகு, தற்போது ஸ்டோக்ஸ் பெறும் 497 புள்ளிகள்தான் அதிகபட்ச புள்ளிகளாகும்.