23 ஆண்டுகால சாதனையை சமன்செய்தார் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ்

லண்டன்: இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், இலங்கை வீரர் அரவிந்த் டி சில்வாவின் 23 ஆண்டு உலகக்கோப்பை சாதனையை சமன் செய்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டியில் ஆடும் ஒரு வீரர் 80 ரன்களுக்கு மேல் எடுத்து, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, 2 கேட்சுகளையும் பிடிப்பது என்ற நிகழ்வுகளை கடந்த 1996ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் இலங்கை வீரர் அரவிந்த டி சில்வா செய்திருந்தார்.

தற்போது அந்த நீண்டகால சாதனையை 23 ஆண்டுகள் கழித்து சமன் செய்துள்ளார் பென் ஸ்டோக்ஸ். இவர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 89 ரன்கள் எடுத்தார்.

இப்போட்டியில் இங்கிலாந்து அணி மொத்தம் 311 ரன்கள் எடுத்தது. பின்னர் சேஸிங் செய்த தென்னாப்பிரிக்க அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.