மான்செஸ்டர்: ஒரே டெஸ்ட் போட்டியில் 250 ரன்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் என்ற சாதனையை எட்டிய முதல் இங்கிலாந்து வீரராகியுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
விண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்டில், முதல் இன்னிங்ஸில் 176 ரன்களை எடுத்தார். பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் 78 ரன்களை விரைவாக விளாசினார். மேலும், இரண்டும் இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் 3 விக்கெட்டுகள் என்று பங்களித்து, சாதனை வீரராக மாறியுள்ளார்.
மேலும், டெஸ்ட் போட்டியில், 36 பந்துகளிலேயே அரைசதம் அடித்து, அதிகவேக அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையும் பெற்றார்.
மேலும், ஓல்டு டிரஃபோர்டு மைதானத்தில், இரட்டை சதம் அடிக்காமல், அதேசமயம், ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்தது.