கிரைஸ்டசர்ச்: இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், இந்த ஆண்டுக்கான நியூசிலாண்டராக நியமிக்கப்பட்டு கெளரவம் அளிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும் இந்த கெளரவத்தைப் பெற்றுள்ளார்.

நியூசிலாந்தின் ரன்களை இங்கிலாந்து சேஸிங் செய்யும்போது, பென் ஸ்டோக்ஸ் அடித்த 84 ரன்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மேலும், சூப்பர் ஓவரிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார்.

பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து நாட்டில் பிறந்தவர் மற்றும் 12 வயதாக இருக்கையில், தனது பெற்றோருடன் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தவர். அதன் பின்னர் அவர் இங்கிலாந்திலேயே தங்கிவிட, அவரின் பெற்றோர் திரும்பவும் நியூசிலாந்து திரும்பி, கிறைஸ்ட்சர்ச் பகுதியில் வாழத் தொடங்கினர்.

“பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தில் வாழ்ந்தாலும், அவரின் குடும்பத்தினர் இன்னும் இங்கேதான் வாழ்கின்றனர். பென் ஸ்டோக்ஸின் பரம்பரை நியூசிலாந்தைச் சேர்ந்ததே!” என்று தெரிவித்துள்ளார் அந்நாட்டு முதன்மை நீதிபதி கேமரோன் பென்னெட்.