பினாமி பெயரில் பரிவர்த்த்னைகள் புரிந்து சட்டத்தையும் மக்களையும் ஏமாற்றுவோரை தண்டிக்கும் வகையில் 1988-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டம் பல்வேறு திருத்தங்களுடன் நாளை (நவம்பர் 1, 2016) முதல் அமலுக்கு வருகிறது. கறுப்புப் பணத்தை முழுவதும் கட்டுப்படுத்தும் நோக்கில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
benami
 
பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கினால் இனி அபராதத்துடன் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியதிருக்கும். அதே நேரம் பினாமி சொத்து முழுவதும் எந்த இழப்பீடும் வழங்காமல் பறிமுதல் செய்யப்படும்.
இச்சட்டத்திலிருந்து நேர்மையாக செயல்படும் மத அமைப்புகளுக்கு மட்டும் விலக்கு அமைக்கப்பட்டிருக்கிறது.