சிந்த், பாகிஸ்தான்

பாகிஸ்தான் அரசை முன்னாள் பாக் பிரதமர் பெனாசிர் புட்டோ மகன் பிலாவல் புட்டோ சர்தாரி கடுமையாக தாக்கி உள்ளார்.

முன்னாள் பாகிஸ்தான் பெண் பிரதமர் பெனாசிர் புட்டோவின் மகன் பிலாவல் புட்டோ சர்தாரி.   இவர் தந்தையும் முன்னாள் பாக் அதிபருமான ஆசிஃப் அலி சர்தாரி மற்றும் தாய் பெனாசிர் புட்டோ ஆகிய இருவருமே தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் ஆவார்கள்.

இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றதும் தீவிர வாதத்தை ஒழிப்பேன் என வாக்குறுதி அளித்தார்.   ஆனால் புல்வாமா தாக்குதலுக்கு பொறுபேற்ற திவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசு அடைக்கலம் அளித்துள்ளது.

இது குறித்து பிலால்வல் புட்டோ சர்தாரி, “பாகிஸ்தான் நாட்டின் மண்ணில் எனது தந்தையும் தாயும் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டனர்.  இதைப் போல் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் வெளிநாட்டு மண்ணில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.   அந்த தீவிரவாதிகளை பாகிஸ்தான் அரசு ஏன் சுதந்திரமாக நடமாட விட்டுள்ளது?

பாகிஸ்தானில் எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் செயல்பட அனுமதிக்க மாட்டேன் என பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.   ஆனால் அவருடைய தெக்ரீக் ஈ இன்சாஃப் கட்சியின் அரசில் உள்ள மூன்று அமைச்சர்களுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது.” என கூறி உள்ளார்.