இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை செய்யப்பட்ட  வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தேடப்படும் குற்றாவளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த பொதுத் தேர்தலில், அப்போதைய பிரதான எதிர்க்கட்சியான ‘மக்கள் கட்சி’யின் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டார்.

அப்போது, ராவல்பிண்டி நகரில் அவரது கட்சி சார்பில் நடைபெற்ற  தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

விசாரணையில்,  இந்த படுகொலையில்  தொடர்பு இருந்ததாக  தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கர வாத அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மற்றும் 2 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில்,  குற்றம் சுமத்தப்பட்டவர்களில்  ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில், முன்னாள் போலீஸ் அதிகாரி உள்பட 2 பேருக்கு 17 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், கொலை வழக்கில் சந்தேகத்துக்கு உரிய நபராக  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பர்வேஷ் முஷாரப் இருப்பதாகவும், அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அவரது சொத்துகளையும் முடக்கவும் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.