இந்திய அணியின் வைப்புத் திறன் வலுவாக உள்ளது: விராத் கோலி மகிழ்ச்சி

அகமதாபாத்: இந்திய அணியின் வைப்புத் திறன் மிகவும் வலிமையாக உள்ளது என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் கேப்டன் விராத் கோலி.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர வென்ற பிறகு அவர் கூறியுள்ளதாவது, “சென்னையில் முதல் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு, நாங்கள் மீண்டும் எழுச்சி பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. முதல் டெஸ்ட்டில் டாஸ் தோற்றது எங்களுக்கு எதிராக போனது.

நாங்கள் பெளலிங் மற்றும் பீல்டிங்கில் அதிக கவனம் செலுத்தியதால், மீண்டு வந்தோம். எங்களது அணியின் வைப்பு திறன் மிகவும் வலிமையாக உள்ளதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில், இதன்மூலம், அணியில் தலைமுறை மாற்றம் நிகழும்போது, அதன் தரம் பாதிக்கப்படாது.

இக்கட்டான நேரத்தில், ரிஷப் பன்ட் – சுந்தர் அமைத்த பார்ட்னர்ஷிப் பெரிய திருப்பமாக அமைந்தது. இங்கிலாந்தை, நமது சொந்த மண்ணில் தோற்கடிப்பது சவாலாக இருந்தது” என்றுள்ளார் கோலி.