பசுவின் நெய் பயன்கள் : மருத்துவர் பாலாஜி கனகசபை

நெய்யைப்பற்றி நம்மிடைய சங்கக்காலத்தில் இருந்தே பயன்படுத்தி வருகின்றோம். அதை சித்த மருத்தவத்திலும், ஆயூர்வேதப்புத்தங்களிலும் காணலாம், வேதங்களிலும் நெய் பயன்படுத்த வரலாற்றை நாம் அறிவோம்.

சத்து விபரம்
நெய்யில் உள்ள சத்து விபரம் இங்கே காணலாம்

http://nutrition.agrisakthi.com/detailspage/GHEE,%20COW/284

நெய்யில் உடலுக்கு நன்மை செய்யும் நல்ல கொழுப்பு அதிகம் உள்ளது. அதோடு விட்டமின் ஏ, டி. இ. கே என்ற விட்டமின்களும் அடங்கி உள்ளது. இதை காயத்தை ஆற்றும் உணவுப்பொருட்களில் ஒன்றாக தற்கால மருத்துவர்கள் வகைப்படுத்தி உள்ளனர்

உடல் எடை குறைத்தல்

நெய்யில் நல்ல கொழுப்பு இருப்பதால் எளிமையாக ஜீரணம் தன்மை ஆகும். இதனால் பேலியோ, கெட்டோஜெனிக் போன்ற உணவு முறைகளில் நெய் பரிந்துரைப்படுகிறது,. அதிக பசியோடு இருக்கும் நேரத்தில் பாலுடன் சிறிது நெய் சேர்த்து உண்டால் பசி ஆறும்.அதோடு நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. ஏனெனில் 100 கிராம் நெய்யில் 900 கலோரி இருக்கிறது.

சமையல்
அதி எரிதிறன் கொண்டால் சமையலில் வறுத்தலுக்கு நெய்யை பயன்படுத்தலாம். இதனால் நெய்யின் துணையோடு பதப்படுத்தினால் நீண்ட நேரம் கெடமால் உணவுப்பொருட்களை பாதுக்காக்கலாம்

செரிமானம்
செரிமானத்திற்கு நெய் உதவுகிறது. ஆகவே குழந்தைகளுக்கு நெய் அன்னம் அளித்துவருவது நம் பண்பாட்டில் இருந்து வருகிறது.

Lactose intolerance எனப்படும் குடல் ஒவ்வாமை இருப்பவர்களுக்கும் , வயிற்று எரிச்சல் மற்றும் உண்டவுடன் மழம் கழிக்கும் உணர்வு , மலச்சிக்கல்,வயிற்றுப்புண், குடல் புண் போன்றவற்றிற்கு நெய் சிறந்த மருந்து. வயிற்றில் உள்ள செரிமான சுரப்பிகளை தூண்டி செரிமான பிரச்னைகளை ஒழுங்குப்படுத்துகிறது.

அதோடு உள்காயங்களை குணப்படுத்துவதிலும், crohn`s disases, ulcerative colitis போன்ற நோய்களை குணப்படுத்துவதிலும் , சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தவதிலும்  நெய்யில் உள்ள பேட்டி ஆசிட்கள் உதவுகின்றன

இரத்தகுழாயில் அதிக கொழுப்பு படியாமல் பாதுகாக்கவும், இரத்தகட்டிகள் உருவாகாமல் தடுக்கவும்,  anti atherosclerosis ஆக செயல்படுகிறது. அதோடு பற் சொத்தை, பற்கள் மற்றும் எலும்புகளை பலப்படுத்தவும் நெய்யில் உள்ள விட்டமின் கே மற்றும் கே2 உதவுகின்றது
நெய்யில் உள்ள Linoleic Acid எனப்படும் பேட்டி ஆசிட் ஆன்டாசிடென்ட் ஆகவும், புற்று நோய் வராமல் பாதுகாக்கவும், வயோதிகத்தினை தள்ளிப்போடவும், இரத்த கொழுப்பை குறைக்கவும் நெய் பயன்படுகிறது, விட்டமின் ஏ அதிகமாக உள்ளதால் மாலைக்கண் நோயையும் தடுக்கும்

சித்த மருத்துவம்

தாகமுழ லைசுட்சம் வாந்திபித்தம் வாயுபிர
மேகம் வயிற்றெரிவு விக்கலழல் மாகாசங்
குன்மம் வறட்சி குடற்புரட்ட லஸ்திசுட்டஞ்
சொன்மூலம் போக்குநிறைத் துப்பு.

சித்தர் பாடல்

பசுவின்நெய்யானது தாகம், உழலைப்பிணி, அதிசுட்கரோகம், வாந்தி, பித்தாதிக்கம் வாதவிஷம், விரணப்பிரமேகம், வயிற்றிலெரிவு, பித்தவிக்கல், இருமல், வயிற்றுவலி, சினைப்பு, குடல்நெளிதல் ,அஸ்திசோம்பல் ,மூலரோகம் ஆகிய இவைகளை நீங்கும்
நெய்யை மேற்பூச்சாக பூசினால் தோல் வறட்சி நீங்கும், எண்ணெய்க்கு பதில் நெய்யை பூசியும் குளிக்கலாம்.
இதை சித்த மருத்துவத்தில் மருந்துடன் சேர்த்து அனுபான பொருளாக நெய் பயன்படுகிறது

நெய்யில் இல்லாமல் சித்த மருந்துகள் அதிகமாக இல்லை என்றே கூறலாம். ஆகவே நம் அன்றாட வாழ்வில் நெய்யை சேர்த்துக்கொள்ளுங்கள்

ஆனால் உங்கள் பசு புல்லை மட்டுமே உணவாக கொண்டிருத்தல் நலம்

மருத்துவர் பாலாஜி கனகசபை, M.B.B.S, PhD(Yoga)
அரசு மருத்துவர்
கல்லாவி (போச்சம்பள்ளி)
99429-22002

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Benefits of COW GHEE, COW GHEE, Doctor Balaji Kanagasabai
-=-