கொல்கத்தா:

மேற்குவங்க மாநில பட்ஜெட்டில் பணமதிப்பிழப்பு பாதிப்பை சரி செய்ய ரூ. 350 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பணமதிப்பிழப்புக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இவரது எதிர்ப்பு நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் எதிர்ப்போடு மட்டும் நிறுத்திவிடாமல் இதற்கான நிவாரணம் வழங்கும் திட்டத்தையும் அவரது அரசு அறிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநில பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து நிதியமைச்சர் அமித் மித்ரா பேசுகையில், ‘‘பணமதிப்பிழப்பு அறிவிப்பால் வேலையிழந்து புலம்பெயர்ந்து திரும்பிய தொழிலாளர்கள் 50 ஆயிரம் நேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கும் வகையில் ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் வேறு தொழில் செய்து கொள்ளலாம்’’ என தெரிவித்தார்.

மேலும், அவர் பேசுகையில்,‘‘ அதேபோல் பணமதிப்பிழப்பால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் துயர் துடைக்க ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு அறிவிப்பால் நாடு முழுவதும் பணியாற்றிக் கொண்டிருந்த மேற்குவங்க தொழிலாளர்கள் திரும்பி வ ந்துவிட்டனர். அவர்களது நிலைமை தற்போது மிகவும் பரிதாபமாக இருக்கிறது’’ என்றார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,‘‘சிறுதொழில்கள் மற்றும் புதிதாக தொடங்கப்பட்ட தொழில்கள் பணமதிப்பிழப்பு அறிவிப்பில் சிக்கி சீரழிந்துவிட்டது. அவர்களுக்கு உதவிடும் வகையில், வாட் வரி விதிப்பு உச்சவரம்பு ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இது தெ £ழில்களை எளிமையாக நடத்த உதவும்’’ என தெரிவித்தார்.

2018ம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பட்ஜெட்டில் சலுகைகள் அறிவி க்கப்பட்டுள்ளது என்றும், தேசிய அரசியலில் கால் பதிக்கும் வகையில் பணமதிப்பிழப்புக்கு நிவாரணம் கிடைக்கும் திட்டங்களை மம்தா பானர்ஜி அரசு கொண்டு வந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், பணமதிப்பிழப்பு பாதிப்புக்கு நிவாரணம் தேடும் வகையில் முதல் மாநிலமாக மேற்குவங்கத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.