கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் தொடர்ந்த அவதூறு வழக்கில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் நடந்த பேரணியில், மமதாவின் ஆட்சியில் மோசடி நடக்கிறது என்றும், பிரதமர் மோடி, மேற்கு வங்க மக்களுக்கு அனுப்பிய நிதி முதலமைச்சர் உறவினர்களுக்கும் அவர்களின் கூட்டாளிகளுக்கும் சென்றுவிட்டதாகவும் அமித் ஷா பேசி இருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மமதா பானர்ஜி உறவினர் அபிஷேக், எம்.பி, எம்.எல்.ஏ.,க்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்தில், அமித்ஷாவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கு தொடர்பாக அமித்ஷாவுக்கு சம்மன் அனுப்பவும், அவர் வரும் 22ம் தேதி நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டு உள்ளது.