விபசார வழக்கில் கைது செய்யப்பட்டது வங்காள நடிகை சுகன்யா சாட்டர்ஜி

விபசாரத்தில் ஈடுபட்டதால் தமிழ் நடிகை சுகன்யா கோவாவில் கைது செய்யப்பட்டதாக ஒரு தகவல் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. மலையாள இதழ்கள் சிலவற்றிலும் இப்படியோர் செய்தி வெளியாகியிருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் சுகன்யா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டபோது
கடந்த மார்ச் மாதம் சுகன்யா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டபோது

ஆனால். “ கோவாவில் கைது செய்யப்பட்டது வங்காள மொழி நடிகையான சுகன்யா சாட்டர்ஜி என்பவர்தான். இந்த விவகாரத்துக்கும் தமிழ் நடிகை சுகன்யாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. பெயர் குழப்பத்தால் தவறான செய்தி வெளியாகியிருக்கிறது” என்று சொல்லப்படுகிறது.

மேலும், “வங்காள நடிகை சுகன்யா சாட்டர்ஜி,  ஏற்கெனவே ஒருமுறை விபசார வழக்கில் கைது செய்யப்பட்டவர். அப்போதும் தமிழ் நடிகை சுகன்யா கைது செய்யப்பட்டதாக மலையாள இதழ்கள் சில, படத்துடன் செய்திகள் வெளியிட்டன. அந்த செய்தியையும் இப்போது தவறாக சிலர் பரப்புகிறார்கள்” என்றும் சொல்லப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி