கள்ளநோட்டு மாற்ற முயன்ற கன்னட நடிகை கைது!

பெங்களூரு,

டைகளில் கள்ள 2000 ரூபாய் நோட்டை மாற்ற முயன்ற முன்னாள் கன்னட துணை நடிகை கைது செய்யப்பட்ர்.

கன்னட துணைநடிகையான  ஜெயம்மா, பிரபல கன்னட நடிகர்களான சுதீப், உபேந்திரா  போனற ஹீரோக்களின் படங்களில்  துணை நடிகையாக நடித்துள்ளார்.

இவர்  ஆட்டோ டிரைவர் ஒருவருடன் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களடன் பெங்களூரில் ஜவுளிக்கடைக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கியுள்ளார்.

கேஷியரிடம் பணம் கட்டும்போது, ஜெயம்மா கொடுத்த 2000 ரூபாய் சற்று வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த கேஷியர் அதுகுறித்து விசாரித்துள்ளார். இதனால், பொருட்களை விட்டுவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு அந்த கடையை விட்டு வெளியேறினார்.

பின்னர் மற்றொரு கடைக்கு சென்று சாமான்கள் வாங்கிவிட்டு, கல்லாவில் பணத்தைக் கொடுத்துள்ளதார். அந்த கடைக்காரரும் ரூபாய் நோட்டு வித்தியாசமாக இருப்பதை உணர்ந்து, அது குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது ஜெயம்மா முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையறிந்த ஜெயம்மா அங்கிருந்து எஸ்கேப்பாகி வேகமாக ஓட துவங்கினார்.

ஆனால், அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் விரட்டிச்சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் விசாரித்ததில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், அவரிடம் இந்த பணத்தைக் கொடுத்தாக ஜெயம்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

You may have missed