Random image

பெங்களூரு விமானநிலையத்தில் பயணிகள் முகத்தை கொண்டு அடையாளம் காணும் தொழில்நுட்பம்…2019ல் அறிமுகம்

டில்லி:

2019ம் ஆண்டு முதல் காகித பயன்பாடு இல்லாத விமானநிலையமாக பெங்களூரு விமான நிலையம் மாறுகிறது.

காகித பயன்பாடு இல்லாத முதல் அரசு நிறுவனமாக இந்தியன் ரெயில்வே கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மாறியது. பயணிகள் டிக்கெட் பிரின்ட் அவுட்டுடன் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. தற்போது 7 ஆண்டுகள் கழித்து 2019ம் ஆண்டில் இத்தகைய நிலைப்பாட்டை பெங்களூரு சர்வதேச விமானநிலையம் எடுத்துள்ளது.

விமான டிக்கெட்களுக்கு பதிலாக பயணிகளின் முக அங்கிகாரம் மூலம் போர்டிங் நடைமுறைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்த லிஸ்பானை சேர்ந்த பயோமெட்ரிக் சொலுயூஷன்ஸ் நிறுவன உதவியை விமானநிலைய நிர்வாகம் நாடியுள்ளது.

இந்த பயோ மெட்ரிக்க தொழில்நுட்பம் பயணிகளின் அடையாளம் முகத்தை கொண்டு உறுதி செய்யப்படும். இதன் மூலம் தேவையற்ற இடங்களில் பயணிகளை நிறுத்தி போர்டிங் பாஸ், பாஸ்போர்ட் மற்றும் இதர அடையாள ஆவணங்களை பரிசோதனை செய்வது குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விமான பயணத்திற்கு ஆரம்பம் முதல் இறுதி வரை காகிதம் இல்லாத முதல் விமானநிலையம் என்ற பெருமையை பெங்களூரு விமானநிலையம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.